என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruparankundram by election"
மதுரை:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அ.தி.மு.க. வென்ற தொகுதி என்பதால் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க.வினர் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொகுதி முழுவதும் விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4-ந் தேதி மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 16 அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே நாளை (7-ந் தேதி) அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை வருகிற 11-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி மீண்டும் மதுரை வருகிறார். அன்று காலை 10 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டுள்ள பழ மார்க் கெட்டை திறந்து வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
மாலை 6 மணியளவில் திருப்பரங்கன்றத்தில் இடைத்தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 15 அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்து வருகிறார்கள். #EdappadiPalaniswami #ADMK
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த மாதம் 2-ந் தேதி மரணமடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது.
இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
சுவர் விளம்பரங்கள் தொகுதி முழுவதும் வரையப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்தி பொதுமக்களிடம் அரசியல் கட்சிகள் ஆதரவு திரட்டி வருகின்றன.
அ.தி.மு.க.வினர் பூத் கமிட்டி அமைத்து விறுவிறுப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு போட்டியாக அ.ம.மு.க.வினரும் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
மதுரை ரிங்ரோடு, வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவது குறித்து தொண்டர்களுக்கு விளக்கினர்.
முன்னதாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
வருகிற 11-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். #EdappadiPalaniswami
தேவகோட்டை:
தேவகோட்டையில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறுகின்றனர். பின்னர் எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அமைச்சர்கள் யாரும் வரமாட்டார்கள்.
பொதுச்செயலாளருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் வரமாட்டார்கள். தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் எங்கள் பக்கம் அவர்கள் வந்து விடுவார்கள்.
தமிழகம் முழுவதும் எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஒரே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை வேறு கூட்டங்களுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று உளவுத்துறை தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.
சர்க்கஸ் கூடாரம் போன்று மக்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டுவது என்பது அவர்களின் ஆசையாக இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னை அ.தி.மு.வின் வில்லன் என்று கூறுகிறார். எனது போட்டோவையும், அவரது போட்டோ வையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும்.
இடைத்தேர்தல் வரும் போது மட்டுமே யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியவரும். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்று கலைஞரின் நினைவிடத்தை அண்ணா நினைவிடம் அருகில் அமைக்க வேண்டும் என்று கேட்டதே தவறு. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இதே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜருக்கு இடம் இல்லை என்று கூறினார்.
பின்னர் எப்படி கருணாநிதிக்கு இடம் கொடுப்பார்கள். இருந்தும் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு எடப்பாடி பழனிசாமியிடம் கருணாநிதிக்கு இடம் கேட்டது தலைமை பண்பான செயல் அல்ல.
எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட வாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும் சந்தித்து வருகிறார்.
நேற்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடன் சீமான் கலந்துரையாடினார். புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார்.
இந்த சந்திப்பு அம்பத்தூர், பி.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அம்பத்தூர் அன்புத் தென்னரசன் மற்றும் விருகை ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக சீமான் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
பாரத ரத்னாவை நாங்கள் ஒருபோதும் விருதாக ஏற்பதில்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று நாட்டிற்காகச் செக்கிழுத்த எங்கள் பாட்டன் வ.உ.சி.க்கு அளிக்காத விருதை, விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளித்தார்கள். அதனால், அவ்விருதை நாங்கள் உயரிய விருதாக ஒருபோதும் பார்க்கவில்லை.
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். எங்கள் தத்துவம் தனித்துவமானது. அதனால், நாங்கள் எப்போதும் தனித்துதான் போட்டியிடுவோம்.
எங்கள் தத்துவத்தையும், கொள்கையையும் ஏற்று எங்களோடு இணைய வந்தால் எவரையும் இணைத்துக் கொள்வோம். திராவிடக் கட்சிகள், இந்தியத் தேசியக் கட்சிகளோடு இணைவது சாத்தியமில்லை.
கோவில்களில் சிலைக் கடத்தல் கோயில்களிலுள்ள குருக்களுக்குத் தெரியாமல் நிகழுமா? எத்தனையோ வழக்குகளுக்கு மத்தியப் புலனாய்வு விசாரணை கோரியபோது விசார ணையை மாற்றித் தர மறுத்து தமிழகக் காவல் துறையின் விசாரணையே போதும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.
பலரைத் தப்பிக்க வைப்பதற்காகத்தான் விசாரணையை மத்திய புலனாய்வுக்கு தமிழக அரசு மாற்ற முனைந்தது. பொன் மாணிக்கவேல் விசாரணை பலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாலேயே அவரை மாற்றத் துடிக்கிறார்கள். அவர் நேர்மையாக இருப்பதுதான் ஆட்சியாளர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. சகாயத்திற்கு என்ன நிகழ்ந்ததோ அதேதான் பொன்.மாணிக்கவேலுக்கும் நிகழுகிறது.
திருமுருகன் காந்தி என்ன தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டாரென வழக்குத் தொடுக்கிறார்கள்? ஒரு அரசுக்கு எதிராகப் பேசுவதே தேசத் துரோகமென்றால் அது அரசா? அரசு என்ன வேண்டுமானால் செய்யலாம். மக்கள் அதற்கு எந்த எதிர்வினையுமாற்றக் கூடாது என்பதை எப்படி ஏற்பது?
சேலத்தில் மக்கள் முன்னிலையில் என்னைக் கைது செய்தார்கள் என்றால் அதன்மூலம் மக்களை மறைமுகமாக அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அதனால், இதனையெல்லாம் அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்