search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvilakku Pooja"

    • உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.

    மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடக்கும் பாடைக்காவடி விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். வலங்ைகமான் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் வலங்கைமான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தமிழ் மணி, நிர்வாக மேலாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.
    • நேற்று இரவு மழை வளம் தொழில்வளம் பெருகவேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்டநகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி யம்மன் கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் கால்நாட்டு விழா நடைபெற்றது.

    நேற்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம் பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக சிறப்பு பஜனையுடன் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்துராஜன், பொருளாளர் ஐகோர்ட் துரை, கொடைவிழா தலைவர் முருகேசன், திருப்பணி குழு தலைவர் பசுபதி, துணை தர்ம கர்த்தாக்கள் துரைராஜ், பாக்கியநாதன், மாடசாமி, வன்னிராஜ், ராஜவேல், ராமசந்திரன், துணைச்செயலாளர்கள் பொன்ராஜ், மணிராஜ், வேம்படி துரை, ஆத்திமுத்து குமார், ஜெயபால், சிவலிங்க ராஜா, ஜெயபால், ஜெயக்குமார், கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், மகளிர் அணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார்.
    • அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 201 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடை பெற்றது. வியாழக்கிழமை அன்று இரவு மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாரதி மதன் தொடங்கி வைத்தார். மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகிய வற்றிற்காக பஜனையுடன் திரு விளக்கு பூஜை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளிக்கிழமை அன்று காலை தீர்க்கரை சென்று வந்து சிவனனைந்த பெருமாளுக்கு மதிய கொடை சிறப்பு பூஜை நடைபெற்று அன்ன தானத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இரவு சாமக்கொடை கொடை விழா நடைபெறுகிறது.

    கோவில் கொடை விழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றானது ஆடி கிருத்திகை வைபவம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபடுவது வழக்கமாகும். திருச்செந்தூரில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, நேற்று கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 விஸ்வரூபதரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் சுவாமியை வழிபட்டனர்.

    • திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது.
    • 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பிரசித்தி பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் வன்மீக நாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் 1008 திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் நிறுவன தலைவர் இளையராஜா செய்து வந்தார்.

    இந்தநிலையில் திருவெற்றியூர் பஞ்சாயத்து தலைவர் திருவிளக்கு பூஜை நடத்துவதால் இடநெருக்கடி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளக்கு பூஜை நடத்தக்கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆண்டுதோறும் விளக்கு பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இயக்கத்தின் மாநில தலைவரான இளையராஜா கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதனைப்பார்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிப திகள் வழக்கம் போல 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று திருவெற்றி யூரில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.

    • கொடை விழாவில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளை கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் அலங்கார பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் செய்து இருந்தார்.

    • செங்கோட்டை கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஆரியநல்லூர் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் கொடைவிழாவை யொட்டி நாடு செழிக்கவும், மக்கள் நோய்- நொடி இல்லாமல் இருக்கவும், மழை வேண்டியும், கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபடுவதுடன் புதிய நோயில் இருந்து மக்களை காத்திட வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பூஜையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சோந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

    மேலூர்

    மேலூர் காந்திஜி பூங்கா அருகில் உள்ள பாலமுருகன் கோவிலின் 38-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் வழங்கினர். இன்று காலை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாலமுருகன் கோவில் கல்வி மற்றும் அன்னதான சொசைட்டி மற்றும் திருப்பணி குழுவினரும், செயலாளர் மலைச்சாமி, நிர்வாக கமிட்டியாளர்கள் தயாநிதி சிங்காரம், கார்மேகம், சீத்தாராமன், மணி, ஹரிகிருஷ்ணன், மோகன், ராமச்சந்திரன், வைராத்தாள் ஆகியோரும் செய்திருந்தனர்.

    • ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.
    • சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மறுநாள் காலையில் யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து அன்னா பிஷேகமும் நடந்தன. மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் பின்னர் அன்னதானமும் நடந்தன.

    இரவில் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். உழவார பணிகளில் ஈடுபட்ட பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பூஜை ஏற்பாடுகளை ஆலய பூசாரி அய்யப்ப பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, போகன், மண்டக படிதாரர்கள் கனகம்மாள், தொழிலதிபர் சிவக்குமார், திருச்செந்தூர் தபால் துறை ஊழியர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.
    • மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் குன்றுப்பாறை-மாதேசிலிங்கம் கோவில் உள்ளது.இந்த கோவிலில் 28-ஆம் ஆண்டு ஸ்ரீ அய்யப்பன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக குன்றுப்பாறை மாதேசிலிங்கம் கோவிலில் நேற்று காலை 9மணிக்கு கணபதி ஹோமம்,ருத்ரஹோமம்,ருத்ரஜபம் நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ அய்யப்பன்,ஸ்ரீ மாதேசிலிங்க சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மாதேசிலிங்க சுவாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது . மாலை 6 மணிக்கு 108 சுமங்கலிப்பெண்கள் நடத்திய திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
    • இன்று இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நேற்று கணபதி ஹோமம், யாகசாலைபூஜை வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. நேற்று மாலை நாட்டில் வறுமை நீங்கி, செழுமை பெற பாடல்கள்பாடி சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடந்தது.வில்லிசை, நள்ளிரவு 1மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம்தெருவீதிபவனிவந்தது.

    இன்று காலை 10 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வில்லிசை, பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் கும்பம் தெருவீதி வருதல், இன்று இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சல் பெட்டி ஊர்வலம், காலை 11 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் வில்லிசை, நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் கும்பம் தெருவீதிவருதல் மாலை 3மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கும். 3-ந்தேதி காலை கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு வரி பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    ×