search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi police firing"

    தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர்.

    இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிவாரண உதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினார். ஆனால் அதனையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest

    சென்னை:

    தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையிலும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் வன்மையாக கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து புதுவையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

    ×