search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thottasinungi flower"

    கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் தொட்டாசிணுங்கி மலர்களின் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்டி வருவதால் சற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டு பூத்துள்ள தொட்டால் சிணுங்கி பூ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த பூக்கள் பெயருக்கு ஏற்றவாறு கை பட்டவுடன் சுருங்கும் தன்மை கொண்டது. மருத்துவ குணம் கொண்ட இந்த பூக்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்த மரத்தின் இலைகள், வேர்கள், மரப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது என்பது மற்றுமொரு விசே‌ஷமாகும்.

    இந்த வருடம் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் தொட்டாசிணுங்கி மலர்களின் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது. அந்த சமயத்தில் பள்ளி கல்லூரிகள் தொடங்கி விடும் என்பதால் அப்போது சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு வடிவமைக்கப்படும் நார்ணியா உருவ பொம்மை தற்போது வைக்கப்பட்டுள்ளது. அதுவும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

    ×