search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thousand"

    • ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களை தேடி மருத்துவம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3, 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் தடுப்பூசி போடவேண்டியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

    இதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் வரும் 19 ஆயிரத்து 59 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    ×