என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Threat letter"
- லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி விக்ரம் பரத், மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.
- பிஷ்னாய் கும்பல் விளம்பர ஸ்டண்ட்டிற்காகவே மிரட்டல் விடுத்துள்ளனர்.
மும்பை:
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் தந்தை சலீம்கானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் நடிகர் சல்மான்கான், சலீம்கானுக்கும், சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதி விரைவில் ஏற்படும் என கூறப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில் ஜி.பி., எல்.பி. என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பஞ்சாப்பை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிராரை குறிப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து சல்மான் கான் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மிரட்டல் கடிதம் கொடுக்க 3 பேர் மும்பைக்கு வந்ததாகவும், அவர்கள் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் ஆறு மணி நேரம் விசாரிக்கப்பட்ட சௌரப் மகாகலை சந்தித்தனர் என்றும் மும்பை போலீசார் தெரிவித்தனர்.
மிரட்டல் கடிதம் கொடுத்த நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது விக்ரம் பரத் என்பது தெரிய வந்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான பரத், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிஷ்னாய் கும்பல் விளம்பர ஸ்டண்ட்டிற்காகவே மிரட்டல் விடுத்துள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது
2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இந்த கால கட்டத்தில் மராட்டிய மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே பப்ளி என்ற இடத்தில் அணைகட்டப்பட்டது.
அப்போது ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களுடன் மராட்டிய மாநிலத்தில் அணைக்கட்டப்பட்ட பப்ளி என்ற இடத்துக்கு போராட் டம் நடத்த சென்றார்.
144- தடை உத்தரவை மீறி சென்ற சந்திரபாபு நாயுடு உள்பட 18 பேரை மராட்டிய அரசு கைது செய்தது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி மராட்டிய மாநிலம் தர்மாபாத் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
பலமுறை நோட்டீசு அனுப்பியும் சந்திரபாபு நாயுடு உள்பட யாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் தர்மாபாத் கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றனர்.
எனவே, சந்திரபாபுநாயுடு உள்பட 15 பேருக்கு கடந்த 12-ந்தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வக்கீல் ஆஜராகி அவரை கைது செய்வதற்கு விலக்கு பெற்றார். மற்ற 14 பேருக்கு பிடிவாரண்ட் உள்ளது.
இந்தநிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்த மராட்டிய மாநிலம் தர்மா பாத் நீதிபதி நரேந்திர கஜபியேவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. ஆந்திராவில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் பிடிவாரண்டை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எழுதியவர் பெயர் அதில் இல்லை.
இதையடுத்து அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #ChandrababuNaidu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்