என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "threatened"
- சொத்துக்களை அபகரிப்பதற்காக மெக்கானிக் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
- ஆசிரியையை மிரட்டியவர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள பெரிய நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜன். இவரது மனைவி அம்பிகாபதி (வயது 50).
இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:-
நான் சிக்கலாம்பா ளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இந்தநி லையில் எனது மாமனார் ஐசக் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தினை அவரது மனைவி பெயருக்கு எழுதி கொடுத்தார். இதனை எனது மாமியார் என் கணவரின் பெயருக்கு மாற்றினார். எனது கணவர் இறந்த பின்னர் இந்ந சொத்தினை நான் அனுபவித்து வருகிறேன்.
இந்தநிலையில் எனது மாமனாரின் முதல் மனைவியின் மகன் ஜோசப் என்பவரது மகன் சொலவம்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக் சாலமோன் ஜான்சன் (43) என்பவர் எனது கணவரின் சொத்தை அபகரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அவர் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் என்னை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் எனது செல்போனுக்கு வாய்ஸ் ரெக்காடர் மூலமாக இழிவு படுத்தும் தகாத வார்த்தைகளை பேசி அனுப்புகிறார்.
கடந்த ஜூலை மாதம் சாலமன் ஜான்சன் எனக்கு சொந்தமான கட்டடித்தில் வாடகைக்கு இருப்பவர்களை மிரட்டி காலி செய்யுபடி மிரட்டி உள்ளார். பின்னர் கடைக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினார். இது குறித்து கடையில் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.சம்பவத்தன்று நான் பள்ளியில் இருந்த போது அங்கு சாலமன் ஜான்சன் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். பின்னர் அவர் உனது கடையை எரித்த எனக்கு உன்னை எரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கூறி பெட்ரோல் கேனை காட்டி எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
மேலும் அந்த சொத்தை உன்னை அனுபவிக்க விடமாட்டேன். உன்னை இல்லாமல் பண்ணிருவேன் என மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ஆசிரியையை மிரட்டிய சாலமன் ஜான்சன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது58). இவர் அரங்கனூரை சேர்ந்த மாணிக்க கவுண்டருடன் குடும்ப நண்பராக பழகி வந்தார்.
இதற்கிடையேமாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மணிவண்ணனிடம் மாணிக்க கவுண்டர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சொன்னார்.
அதன் அடிப்படையில் மணிவண்ணன் இந்த வழக்கு குறித்து விசாரித்து மாணிக்க கவுண்டரிடம் தெரிவித்தார்.
இதனையறிந்த வாசுகி சம்பவத்தன்று மணிவண்ணன் அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அவரது செல்போனில் ேபசிய வாசுகி நீ யாருடா என் குடும்ப விஷயத்தில் தலையிட, இனி உன்னை விடமாட்டேன், உன்னை ஆள் வைத்து தீர்த்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த மணிவண்ணன் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையை கொண்ட காட்டு ராஜா (வயது 36). அடிக்கடி வந்து செல்வார்.
சம்பவத்தன்று பெண் ணின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த காட்டுராஜா இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக் கவே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை நிகழ்ந்ததாக தெரி கிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவரது தாயார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மகளை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்தபோது, அந்த பெண் 11 வார கர்ப்பிணியாக இருந்ததை தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மகளிடம் நடந்த விவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி விசாரணை நடத்தி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த காட்டு ராஜாைவ போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.
- ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.
- புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை அருகே அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அந்த வாலிபர் அவரது செல்போனில் எடுத்தார்.
இந்த நிலையில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும் போது நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.
மேலும் நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். இழப்பீடாக ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டுகிறார்.
கடந்த 12-ந் தேதி இரவு எனது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர் வீட்டில் உள்ள சுவரில் இது தான் கடைசி எச்சரிக்கை என எழுதி விட்டு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் எனது அண்ணனிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
- வாலிபருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு
குனியமுத்தூர்,
கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எங்களது பகுதியை சேர்ந்த கார் பெயிண்டருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் எனது கணவரின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தேன்.
இந்த நிலையில் எனது கணவர் தனியார் கார் பெயிண்டிங் கம்பெனி தொடங்க திட்டமிட்டார். இதற்காக எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கேட்டார். நான் முடிந்தால் வாங்கி தருகிறேன் என்று கூறியிருந்தேன். நான் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் எனக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
எனது கணவர் நான் பணம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும் எனது கணவர் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது உறவினர்களிடம் காண்பித்துள்ளார். பணம் வாங்கி தராவிட்டால் மார்பிங் செய்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் பெயிண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டில், கொடுமை, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ் நிலையத்தில் வாலிபர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.
- முத்துகாதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.
சூலூர்,
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை கோவையில் இருந்து பேசுவதாக கூறி வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
அவர் போலீ சாரிடம் கோவி ல்பாளையம் பகுதி யில் சிலர் நின்று கொண்டு சூலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக கட்டு ப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இதுகுறித்து சூலூர் மற்றும் கோவி ல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சூலூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்துக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால் வாலி பர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.
இது குறித்து சூலூர் போலீசார் போனில் பேசிய வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொய் புகார் அளித்தது சூலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து காதர் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அப் போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனை யடுத்து அவர் அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்று செல்போனை சார்ஜ் போட்டார். பின்னர் முத்து காதர் அவரது மனைவியின் செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்து மீதமுள்ள மதுவை குடித்து உள்ளார். போதை தலைக் கேறிய நிலையில் இருந்த அவர் பொய் புகார் அளி த்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட முத்து காதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.
- பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார்.
- அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்தில் இருந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்..
அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள நடராஜன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
புதுச்சேரி:
புதுவை அருகே தேங்காய்திட்டில் மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை தேங்காய்திட்டு காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜா(வயது50). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்குள்ள புத்துக்கோவில் அருகே கோவிந்தசாமி என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(22) என்பவர் அந்த வழியாக சென்றார். திடீரென கார்த்திக் தன்னை ஏன் முறைத்து பார்க்கிறாய்? என ராஜாவிடம் கேட்டார். அதற்கு ராஜா நான் முறைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் இதனை ஏற்காமல் கார்த்திக் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனால் ராஜா அலறல் சத்தம் போட்டார்.
இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்த கார்த்திக் ராஜாவிடம் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஏழுமலை. இவர் கடந்த 8 -ந்தேதி நல்லாத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (வயது 24), விஜயபாரதி வயது (24) ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை இருவரையும் விசாரித்தார். அப்போது உதயகுமார், விஜயபாரதி ஆகியோர் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கச்சிராய பாளையம் போலீஸ் நிலை யத்தில் ஏழுமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த 2பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
- கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை.
- நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.
பீளமேடு,
கோவை ஆவா ரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் வேளாண் பல்கலையில் பேராசிரி யராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறு வனத்தை நடத்தி வந்தேன்.
ஆனால் அவர்கள் சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை. அதனை ஆய்வு செய்ய நான் கம்பெனிக்கு சென்றேன். ஆனால் சண்முகம் என்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.
இதனை தெரிந்து கொண்ட அவர்கள் என்னை கம்பெனிக்குள் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன நான் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன்.
என்னை அடைத்து வைத்து மிரட்டிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கைது செய்தனர்.
- சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
ஊட்டி
ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கவிப்பிரியா (வயது 32). இவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கவிப்பிரியா பணி முடிந்து பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ் ஏறி தலைக்குந்தா சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த டிரைவர் உமர் என்ற சையது காதருக்கும், கவிப்பிரியாவுக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த உமர் தகாத வார்த்தையால் பேசி கவிப்பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் கவிப்பிரியா தனது கணவர் மற்றும் ஊர்மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகாரின் பேரில் தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்த உமர் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்