search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THUNDER AND LIGHTNING RAIN"

    • திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
    • உப்பிலியபுரம் அருகே மழைக்கு புளிய மரத்தடியில் ஒதுங்கிய பட்டதாரி வாலிபர் நாகராஜ் (வயது 23) மின்னல் தாக்கி சுருண்டு விழுந்து இறந்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பொழிகிறது. நேற்றைய தினம் இரவு மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    திருச்சி மாநகரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    நேற்றைய மழையில் அதிகபட்சமாக தென்பரநாடு பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தின் இதர பெய்த பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    லால்குடி-17.20, புள்ளம்பாடி 1, தேவிமங்கலம்-6.40, சமயபுரம்-7.20, வாத்தலை அணைக்கட்டு-19.20, மணப்பாறை-2.6, பொன்னணியாறு-6.6, கோவில்பட்டி-25.20, மருங்காபுரி 5.20, முசிறி-6, புலிவலம்-5,

    தாத்தையங்கையர் பேட்டை-5, நவலூர் கொட்டப்பட்டு-33.60, கொப்பம்பட்டி-50, துறையூர்-7, பொன்மலை-24.9, திருச்சி ஏர்போர்ட் பகுதி-4.40, திருச்சி ஜங்ஷன்-34.40, திருச்சி டவுன்-44 என மாவட்டம் முழுவதும் 363.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே மழைக்கு புளிய மரத்தடியில் ஒதுங்கிய பட்டதாரி வாலிபர் நாகராஜ் (வயது 23) மின்னல் தாக்கி சுருண்டு விழுந்து இறந்தார். மேலும் அவருடன் சென்ற பிரதீப் (10), நிதீஷ் (12) ராகேஷ் (14) சரண் (11) சின்னதுரை (25) அருண்குமார் (22) ஆகிய சிறுவர்கள் உட்பட 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்றும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இருந்தபோதிலும் விடுமுறை தினமான இன்று தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்த வண்ணம உள்ளனர்.

    ×