என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » timithi festival
நீங்கள் தேடியது "Timithi Festival"
உழந்தைகீரப்பாளையத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை உழந்தை கீரப்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கடந்த 27-ந் தேதி சாகை வார்த்தல், சாமி அலங்கார வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 108 பால்குட அபிஷேகம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாகம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண் பக்தர்கள் அதிகளவில் தீ மிதித்தனர். ஒரு பக்தர் தனது இரு குழந்தைகளையும் கையில் சுமந்தபடியே வந்து தீமித்து தனது நேர்த்திக்கடனை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.
- திருவிழாவை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
- இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் காமாட்சி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதியை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற தீமிதி உற்ச்சவத்தின் போது காமாட்சி மகாமாரியம்மன் தீகுண்டம் அருகே எழுந்தருள சக்தி கரகத்தை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவில் தென்பாதி, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கன பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி மகாமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X