search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirthavari"

    • தேவகோட்டை மணிமுத்து ஆற்றில் 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் ஐப்பசி மாத முதல் தீர்த்த வாரியை முன்னிட்டு நகரில் உள்ள சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்தி பூங்காவை அடைந்தனர்.

    அதேபோல் தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அகத்தீஸ்வரர், சவுந்தர நாயகி அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் கோட்டூர், மார்க்கண்டன்பட்டி வழி யாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் காந்தி பூங்காவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் மணிமுத்தா ற்றில் எழுந்தருளினர்.

    அங்கு 7 சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரை சேர்க்கை யாளர்களும், நாட்டார்களும், நகரத்தார்களும் பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடு களை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

    • 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
    • கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை
    • வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம்

    காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக் காலங்களே.

    சித்திரையில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

    வைகாசியில் ஸ்ரீ அம்பாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் முந்தைய நாள் மூஞ்சுறு வாகனத்தில் ஸ்ரீ விநாயகபெருமான் வீதி உலா நடைபெற்று, இத்திருக்கோவிலின் அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று புதுமண் கொண்டு வந்து மறுநாள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் ஆரம்பமாகிறது.

    முதல் நாள் இரவு அம்பாள் வீதி உலாவும், 2-ம் நாள் இரவு காமதேனு வாகனத்திலும், மூன்றாம் நாள் காலை பூதகி வாகனத்திலும், நான்காம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரவு சிம்ம வாகனத்திலும், ஆறாம் நாள் இரவு யானை வாகனத்திலும், ஏழாம் நாள் காலை தேரோட்டமும், எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் இரவு கிண்ணித் தேர் என வழங்கும் ஸ்ரீ சக்ர ரதாரோஹனத்தில் ஸ்ரீ அம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    பத்தாம் நாள் காலை ஸ்ரீ நடராஜர் உற்சவமும், பின்பு தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு விசாகத்தை முன்னிட்டு ஆறுமுக சாமி உற்சவமும், கொடி இறக்கமும் நடைபெறுகின்றது. அடுத்து பந்தம்பறி உற்சவமும், அதற்கு மறுநாள் ஸ்ரீ உற்சவமூர்த்தி ஸ்ரீ அம்பாளுக்கும் மற்றுமுள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறுகின்றது.

    பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு அலங்கார ஸ்ரீ நடராஜர் மண்டபத்திற்கு வருகை புரிந்த உற்சவமூர்த்தி அம்பாள் அமாவாசை அன்று தன் ஆஸ்தானத்திற்கு செல்லும் ஆஸ்தான பிரவேச உற்சவமும் நடைபெறும். அதற்கு மறுநாள் அம்பாளின் விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகின்றது.

    ஆனி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த உற்சவமும் ஆடியில் ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் இரவு வெள்ளி தொட்டிலில் ஊஞ்சல் உற்சவமும் பத்து ஞாயிற்றுக்கிழமைகள் பகல் 11 மணியளவில் முறையே 108 குடம் பாலபிஷேகம், 108 குடம் இளநீர் அபிஷேகம், 108 குடம் தயிர் அபிஷேகம், 108 குடம் மஞ்சள் அபிஷேகம், 108 குடம் சந்தன அபிஷேகம், 108 குடம் விபூதி அபிஷேகம், 108 குடம் பன்னீர் அபிஷேகம், 108 குடும் பஞ்சாமிர்த அபிஷேகம், 108 பூக்கூடையால் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றது.

    மேலும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகமும, மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசியில் பத்து நாட்கள் சாரதா நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

    நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள் துன்பங்களை நீக்கும் துர்க்கா பரமேஸ்வரியாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ மகாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் ஞானபாக்கியத்தைத் தரும் ஸ்ரீ சரஸ்வதியாகவும் அருள்பாளிக்கிறாள்.

    இந்த நவராத்திரியின் ஏழாம் நாளன்று ஸ்ரீ அம்பாளுக்கு நவவர்ண பூஜை நடைபெறுகின்றது. மேலும் இந்த நவராத்திரி தினங்களில் குழந்தைகளை அம்பாளாக பாவித்து பூஜை செய்வது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த நவராத்திரி தினங்களில் மாலையில் இன்னிசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி பவுர்ணமியில் அருள்மிகு கமடேஸ்வரர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி உற்சவமும், லட்சார்ச்சனையும், சூரசம்ஹார உற்சவமும் நடைபெறுகின்றது.

    சூரசம்ஹாரத்தின் மறுநாள் ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றன. ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவத்தின் போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் திருமாங்கல்ய சரடுகள் வழங்கப்படுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் சோம வாரங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் இரவு வெள்ளித் தொட்டியில் ஸ்ரீ அம்பாள் அலங்காரத்துடன் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வருவாள்.

    கார்த்திகை தீபத்தன்று ஒன்பது பெரிய அகலில் தீபமேற்றி அம்பாள் எதிரில் மஹா தீபாராதனை நடைபெற்று ஒவ்வொரு சன்னதியில் மேற்படி அகல் தீபம் ஏற்றப்பட்டு ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். பின்பு, அலங்காரம் செய்யப்பட்ட அம்பாள் கோவிலில் வெளியில் வந்து நிற்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் தினசரி விடியற்காலை 4.30 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் உள்பட பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து பக்தி பரவசத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்து கூட்டு வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாகும்.

    மார்கழி மாதத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறுகின்றது. பத்தாம் நாள் ஸ்ரீ நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

    தை மாதத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி விழாவும், தை மாதம் வெள்ளிக்கிழமை மாலையில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவமும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு மகுடாபிஷேகமும் நடைபெறுகின்றது. அருகிலுள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ அம்பாள் தெப்ப உற்சவத்திற்காக எழுந்தருளுவார்.

    மாசி மாதம் மாசி மகத்தன்று ஸ்ரீ அம்பாள் சென்னை கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மக உற்சவம் நடைபெறுகின்றது. மாசி கிருத்திகையன்று ஸ்ரீ முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகமும், இரவு மயில் வாகனத்தில் ஸ்ரீ முருகபெருமான் வீதி உலாவும் நடைபெறுகின்றது.

    பங்குனி மாதத்தில் ஸ்ரீ அம்பாளுக்கு வசந்த நவராத்திரி விழாவும் குங்கும லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுகின்றது.

    ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திர தினத்தன்று இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்திருக்கோவிலில் நாள் தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    • ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
    • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான்ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 17-வது நாளில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணியளவில் கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடந்தது. தொடர்ந்து கையில் வாளி, இடுப்பில் குடம், மற்றொரு கையில் ஊத்துபட்டை ஏந்திய அலங்காரத்தில் அம்மன் வைகை ஆற்றுக்கு சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு 12 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தவாரி மேடையில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டியன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாலையில் வைகை ஆற்றிலிருந்து ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    பௌர்ணமி விசாக நாளில் இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் முருகன் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழாவில்நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது

    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது குழகர் கோவில் என்னும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன்-5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி நடைபெற்றதுநேற்று பௌர்ணமி விசாக நாளில்இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முருகன் எழுந்தருளி சென்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
    • நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்

    திருச்சி,

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார்.

    பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்தஉற்சவத்தின் 7-ம் நாளான 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது

    புதுக்கோட்டை:

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றத்துடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி புஷ்ப ஊரணியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.



    • கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
    • கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடை பெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    மங்களாம்பிகை அம்மன் 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை சேர்த்து 72ஆயிரம் கோடி சக்திகளையும் உடையவராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். இக்கோவில் மகாப்பிரளயத்திற்கு பிறகு உலகில் தோன்றிய முதல் தலமாக கருதப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமாகவும், ஆண்டுதோறும் நடை பெறுவது மாசி மக விழாவாகவும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசிமக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி விநாயகர், முருகன், சாமி, அம்பாள் ஆகிய 4 தேரோட்டமும், 5-ந் தேதி சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், 6-ந் தேதி மகா மககுளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமமும், கணபதி பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து 2 பந்தக்காலுக்கு 16 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் வளாகம் மற்றும் விநாயகர் தேரில் பந்தக்கால் நடப்பட்டது.

    இந்த விழாவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி.
    • கார்த்திகை தீபம் ஏற்றி வீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீரான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் திருக்கா ர்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 8-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 9 முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகே ஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு திருவீதி உலா நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து நாளை முதல் 1-ம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 2 - ந் தேதி காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெறும். 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து 6-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும்.

    இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    7-ம் தேதி சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு பக்தர்க ளுக்கான சிறப்பு வசதிகள் செய்ய முன்னேற்பாடுகளை கோவில் துணைஆணையர் உமாதேவி, கண்காணிப்பா ளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.

    ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

    முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    ×