என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருடசேவை
Byமாலை மலர்30 Sept 2023 2:44 PM IST
- 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
- கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.
இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×