search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirunelveli government hospital"

    நெல்லை தச்சநல்லூரில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்ததால் தூங்கி கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் உள்ள மாவடிக்குளத் தாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமையா (வயது80). விவசாயி. இவர் படுக்கும் போது தினசரி கொசுவர்த்தி சுருள் கொளுத்தி வைப்பது வழக்கம். அதுபோல கடந்த 4-ந்தேதியும் இவர் கொசுவர்த்தி சுருளை தீயில் கொளுத்தி படுக்கை ஓரத்தில் வைத்து விட்டு தூங்கினார்.

    இதில் கொசுவர்த்தி சுருள் எரிந்து படுக்கையில் தீப்பிடித்தது. தூங்கி கொண்டிருந்த முதியவரால் எழுந்து போக முடியாததால், அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு ராமையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி நிர்வாகி ஒருவர் இன்று பலியானார். #swineflu
    நெல்லை:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகளவில் இருக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை சுமார் 17 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனால் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு யூனியன் பகுதியிலும் 3 வாகனத்தில் டாக்டர்கள் அடங்கிய குழு வினர்களும், மற்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வார்டில் தற்போது 20 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று பலியானார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ஆலங்குளம் அருகே உள்ள கோவிலூற்று கிராமத்தை சேர்ந்தவர் வேலவன் (வயது45). இவர் கோவிலூற்று அருகே உள்ள பூலாங்குளத்தில் நடுநிலைப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ரத்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து வேலவன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேலவன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து மருத்துவகுழுவினர் அவரது குடும்பத்தினர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #swineflu
    ×