என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tirupur Police Commissioner"
- ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
- திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.
திருப்பூர்:
திருப்பூரின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன் ராம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களை அணுகினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.
இதனை நம்பி மேற்கண்ட 2 பேரிடம் நாங்கள் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 350 பேர் வரை ரூ.5 கோடி வரை பணம் கொடுத்துள்ளோம். ஆனால் பணத்தை தராமல் அவர்களது குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். பணத்தை கேட்டால் எந்த பதிலும் கூறாமல் ஏமாற்றி வருகின்றனர். சுமார் ரூ. 5 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தவர்களிடம் இருந்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் உள்பட 4 உயர் போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
அதன் விவரம் வருமாறு:-
* திருப்பூர் போலீஸ் கமிஷனர் எஸ்.மனோகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சஞ்சய்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆர்.ஜெயந்தி, ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன், கமாண்டராக மாற்றப்பட்டார்.
* ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றும் டாக்டர் டி.செந்தில்குமார், மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்