என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tiruvananthapuram Govt Hospital"
- திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர்.
- சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணை கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அரசு டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டத்திற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்த நாளில் கேரளாவில் மீண்டும் டாக்டர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அதன்விபரம் வருமாறு:-
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் நரம்பியல் துறையில் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர். அங்கு சுதீர் என்ற வாலிபர் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறிய சுதீர் திடீரென அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி டாக்டர்கள் இருவரும் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில், டாக்டர்களை தாக்கிய சுதீரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்த நாளில் டாக்டர்களை தாக்கியதாக வாலிபர் சுதீர் கைது செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் கைகளில் இருந்து கைக்குழந்தை தவறி கீழே விழுந்தது.
- படுகாயம் அடைந்த குழந்தையை உடனே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை, காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி ஷீலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷீலா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.
நேற்று அந்த குழந்தையை ஆஸ்பத்திரி நர்சு, கைகளில் எடுத்து வந்தார். அப்போது தவறுதலாக குழந்தை அவரது கைகளில் இருந்து கீழே விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த அடிப்பட்டது. படுகாயம் அடைந்த குழந்தையை உடனே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்