என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tiruvarur fire accident
நீங்கள் தேடியது "Tiruvarur fire accident"
திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே 3 கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
திரூவாரூர்:
திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள வி.ஆர்.எம் சாலை வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும்.
இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பேக்கரி கடையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் தீ விபத்தை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீ மளமளவென பிடித்து அருகிலிருந்த தையற்கடை, செருப்புக் கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் திருவாரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் போது பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பேக்கரி, தையற்கடை, செருப்புக்கடை ஆகியவற்றிலுள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இந்த விபத்து குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

×

X