search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Police Team"

    • 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன்.
    • துப்பாக்கிச் சுடும் போட்டியில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    செங்கல்பட்டு மாவட்டம் ஓதிவாக்கத்தில் 23-வது அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் வருகிற 13 வரை நடைபெறுகிறது. இதில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரவரிசையில் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர்.

    நிகழ்ச்சியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். 2011-ம் ஆண்டுக்கு பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. அவர்களில் 8 பேர் மத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இதில் தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ பிரிவில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சோபியாலாரன் என்ற 42 வயது பெண் தலைமைக் காவலர் இடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அணியில் இருந்து வந்துள்ள ஒரே பெண்மணி இவர் மட்டும்தான்.

    திருச்சி அருகே உள்ள கல்லணை தோகூர் பகுதியைச் சேர்ந்த சோபியா கூறும்போது, நான் 2004-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தேன். நான் மாநில மற்றும் தேசிய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாநில அளவில் மற்றும் சிவிலியன் நிகழ்வுகளில் நான் பல பதக்கங்களை வென்றுள்ளேன். என்னுடைய போட்டி இன்று நடைபெறுகிறது.

    நான் ஏற்கனவே தேசிய அளவிலான துறை ரீதியிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். இந்தப் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். பிளஸ்-2 வகுப்புக்குப் பிறகு நான் சீருடை அணிந்த சர்வீஸ்களில் சேர விரும்பினேன்.

    எனது முதல் துப்பாக்கி சுடுதல் போட்டி 303 வகை ரைபிளுடன் இருந்தது. அதுமுதல் நான் எந்த துப்பாக்கி சுடும் போட்டியையும் தவறவிட்டதில்லை. இதில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். 

    ×