search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to chase away the single elephant"

    • கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
    • ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்ைற யானை விரட்டியது.

    சத்தியமங்கலம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குன்றி மலைப்பகுதியை சேர்ந்தவர் பொம்மேகவுடர் (55) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சித்துமரி (65) கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் பொம்மேகவுடர் மாக்கம்பாளையத்தில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.

    இதேபோல் குன்றி மலைப்பகுதியில் இருந்து சித்துமரி வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு மாக்கம்பா–ளையம் நோக்கி வந்தார்.

    அப்போது அவர்கள் கடம்பூர் அடுத்த தட்டப் பள்ளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒரு ஒற்றை யானை திடீரென சாலைக்கு வந்தது.

    யானையை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதில் ஆக்ரோஷத்துடன் பின் தொடர்ந்து அவர்களை ஒற்றை யானை விரட்டியது. ஒரு கட்டத்தில் பொம்மேகவுடர், சித்துமரி ஆகியோரை யானை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து அடித்து கொன்றது.

    மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை தாக்கி இறந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்க ளது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    இதனால் பலியானவர்களின் உறவினர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    மேலும் யானை தாக்கிய பலியானவர்களின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே 2 பேரை அடித்து கொன்ற ஒற்றை யானையை கண்காணித்து விரட்ட கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையில் வனத்துறையினர் குழு அமைத்துள்ளனர். அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதி க்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் மாக்கம்பாளையம் சுற்று வட்டார பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    ×