search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to issue warning notices"

    • இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது.
    • இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை 36-வது வார்டில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் பின்புறம் ஏராளமான மரங்கள், புற்கள் வளா்ந்து புதர் போல காட்சியளித்தது. மேலும், வணிக வளாகங்க–ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது. சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையில் சுகாதார உதவியாளர் தங்கராஜ் முன்னிலையில் 38 பேர் கொண்ட தூய்மை பணியாளர்கள் ஜே.சி.பி. வாகனம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    இந்த பணிகளை மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவல–கத்தின் பின்புறம் உள்ள 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து சாக்கடையில் குப்பையையும், கழிவு பொருட்களையும் வீசியது தெரியவந்தது.

    இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் முறையாக கழிவு நீர் வெளியேற பைப் லைன் அமைக்காவிட்டால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இணைப்பு முற்றிலுமாக அடைக்கப்படும். ஓரிரு நாளில் அதற்கான கட்டமைப்பினை உருவாக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    ×