search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to take crop insurance"

    • ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:- சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் சேதம், இழப்பு ஏற்படும் போது பயிர் காப்பீடு திட்டம் மூலம், இழப்பை தவிர்க்கலாம்.

    ஈரோடு மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்ய ப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வரும் ஜனவரி மாதம் 18 -ந் தேதிக்குள் முட்டை கோஸ் பயிர் ஏக்கருக்கு, 1,100 ரூபாய்,31-ந் தேதிக்குள் வெங்காயம் ஏக்கருக்கு 2,210 ரூபாய், பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் வெண்டை பயிர் ஏக்கருக்க 972 ரூபாய், 28-ந் தேதிக்குள் வாழை பயிர் ஏக்கருக்கு 4,485 ரூபாய், மரவள்ளி பயிர் ஏக்கருக்கு, 1,940 ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்.

    அந்தந்த பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×