என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Toll Plaza Clash"
- காரில் வந்தவர்கள் சுங்சச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- ஹாக்கி மட்டைகளால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் பிடாடி நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் திடீரென மோதல் ஏற்பட்டது. மைசூர் நோக்கி சென்ற ஒரு காரில் பயணித்த 4 நபர்கள், சுங்கச்சாவடியை நெருங்கியபோது, சுங்கச்சாவடியின் பூம் பேரியர் கேட் திறக்க தாமதம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சுங்சச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுங்கச்சாவடி ஊழியர் பவன் குமார் (வயது 26) கொல்லப்பட்டார். மற்றொரு ஊழியர் மஞ்சுநாத் பலத்த காயமடைந்தார்.
இதுதொடர்பாக பிடாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ ஆதாரத்தை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மோதலில் ஈடுபட்டவர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலில் இரவு 10 மணியளவில் சுங்கச்சாவடியில் மோதல் ஏற்பட்ட நிலையில், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் அங்கு வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டுள்ளனர். இதனால் சண்டை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு காரில் வந்தவர்கள் சற்று தொலைவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இரவு 12 மணியளவில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பவன் குமார், மஞ்சுநாத் இருவரும் சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோது ஹாக்கி மட்டைகளால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
- உள்ளுர் மக்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின் வாகனத்திற்கு, எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, அந்த வாகனத்திற்கான பாஸ்டேக் வேலை செய்யவில்லை. இதனால் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வாகனத்தை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்படி ஊழியர்கள் கூறி உள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் வந்து மாணவர்களை கலைந்துசெல்லும்படி அறிவுறுத்தினர். மேலும், மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறினர்.
ஆனால் மாணவர்களோ ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது.
இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்