என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tourists ban bbathing
நீங்கள் தேடியது "Tourists Ban Bbathing"
மலைப்பகுதியில் பெய்துவரும் கன மழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #courtallam
தென்காசி:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் இறுதி வரை சீசன் இருக்கும். இந்த ஆண்டு மே மேத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட சீசன் ரம்மியமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைப்பகுதியில் அவ்வப்போது கன மழை பெய்வதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் நள்ளிரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குற்றாலத்தில் இன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் வெள்ளம் காரணமாக அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். புலியருவி, சிற்றருவி ஆகிய 2 அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளுக்கு படையெடுத்தனர். வெள்ளம் சற்று குறைந்தாலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் அருவிக்கரையில் காத்து நின்றனர்.
தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக குற்றாலம் சுற்றுப்பகுதியில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. #courtallam

×

X