search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists can enjoy"

    • ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
    • பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வருவது தொடர்கின்றது.

    குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

    கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    பள்ளிகள் திறந்த பின்னரும் கனிசமான அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. கடந்த சில தினங்களாக ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது.

    ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் சுற்றுலா தலங்களை ரசித்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி, பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.f

    ×