search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town Link Road"

    • நெல்லை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது.
    • கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யின் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை கண்ணன் பெயர்

    கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை டவுன் ஆர்ச் முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழ் அறிஞர் நெல்லை கண்ணனின் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கூட்டம் இந்த தீர்மானத்துடன் முடிவடைவதாக மேயர் சரவணன் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், உலகநாதன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் சாலை என பெயரிட்டதற்கு வாழ்த்தி பேசுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்குள் கூட்டம் முடிக்கப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 27-ந்தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்தி கருத்து கேட்டு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்களின் ஒட்டுமொத்த ஆதரவின் கீழ் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயர் சூட்டப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், கிட்டு, கோகுல வாணி, பவுல்ராஜ், அனுராதா சங்கரபாண்டியன், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன், சந்திரசேகர், முத்து சுப்பிரமணியன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×