என் மலர்
நீங்கள் தேடியது "train accident"
- நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.
- விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.
அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.
தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.
நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.
அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார்.
- ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
- யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.
- ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
- அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.
ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.
ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
- சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
இதில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.
மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.
- தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது.
- தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம்:
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.
நேற்று இவர் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேபோல் தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகன் சமாதியில் சடங்கு செய்ய சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். சலவைத் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அரக்கோணம் ரெயில்வே அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். வசந்தா தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்தார்.
மகன் இறந்த இடத்திற்கு சடங்கு செய்வதற்காக வசந்தா சுடுகாட்டிற்கு சென்றார். அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த அரக்கோணத்தில்இருந்து திருத்தணி சென்ற புறநகர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் வசந்தாவின் உடலை அரக்கோணம் ரெயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம் பெரியாங்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் குமார் (வயது53). இவர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார்.
- மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் எட்டியான் (வயது 65). கூலித்தொழி லாளி. இவர் தினமும் திண்டிவனம் ெரயில்வே நிலை யத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து விற்று வந்தார்.
அதேபோன்று இன்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டியான் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் எட்டியான் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படிக்கட்டில் பயணம் செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
டெல்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார் பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம் பாடி ரெயில்நிலையம் அருகே வந்தபோது சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒரு வர் தண்டவாளத்தை கடந் துள்ளார். அவர் மீது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் சென்று ரெயிலில் சிக்கி பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.