search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training for seed"

    • உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி ஈரோடு துல்லிய பண்ணை விதை உற்பத்தியாளர் வளாகத்தில் வேளாண்மை  உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகு படியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விதை ச்சான்று மற்றும் அங்க கச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

    கொடுமுடி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா கலந்து கொண்டு வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) மா.கணேசமூர்த்தி விதை ப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், சுத்தி அறிக்கை பெறுதல் பற்றி பயிற்சி அளித்தார்.

    ஈராடு, அங்ககச்சான்று ஆய்வாளர் சி.மகாதேவன், அங்ககச்சான்று பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். கொடுமுடி, அட்மா திட்ட வட்டார மேலாளர் கிருத்திகா இப்பயிற்சிக்கான எற்பாடுகளை செய்தார்.

    ஈரோடு துல்லிய பண்ணைய சுத்தி நிலைய பொறுப்பு அலுவலர் பாபு விதை சுத்தி நிலைய செயல்பாடுகள் பற்றி செயல் விளக்கம் அளித்தார்.

    ×