என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Transport facilities"
- வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.
- கிராம பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள்.
திருவையாறு:
திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் தென் எல்லையில் சுமார் 8 மீட்டர் அகல முடைய கோணக்கடுங்கால் ஆறு ஓடுகிறது. குழிமாத்தூரி லிருந்து இந்த ஆற்றின் தென் கரைக்கு நேர் எதிராக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடம்பன்குடி கிராமம் உள்ளது. 4 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம் உள்ள வயல்களின் நடுவில் சாலை வசதி ஏதும் இல்லாத நிலையில் இந்த கடம்பன்குடி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்திலிருந்து மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேற்படிப்புக்காக குழிமாத்தூர் வழியாக திருப்பூந்துருத்தி, திருவை யாறு மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலி லுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்கிறார்கள். இந்த ஆற்றில் தண்ணீர் வராத போது வயல் வரப்புகள் வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து குழிமாத்தூரிலிருந்தும், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அம்பதுமேல்நகரம் கிராமம் வரையில் நடந்து சென்று பஸ் மூலமாக குழிமாத்தூர் வழியாக சென்று வருகிறா ர்கள்.
குழிமாத்தூர் மற்றும் கடம்பன்குடி பகுதி விவசாயம் மற்றும் கூலி வேலையாட்களும் இந்த இரண்டு கிராமப் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருவதில் பயண தூரமும், நேர விரயமும் அதிகமாவதால் சிரமப்படுகிறார்கள். மேலும், கடம்பன்குடி கிராம விவசாய நிலங்களிலிருந்து அறுவடையாகும் நெல் மற்றும் வைக்கோல்களை சாலை வசதி இல்லாததால் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குழிமாத்தூருக்கு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, சாலைப் போக்குவரத்துவசதி இல்லாமலும் அருகாமையி லுள்ள குழிமாத்தூர், அம்பது மேல்நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்க ளோடு தொடர்பில்லாமல் தனித்து விடப்பட்ட தீவு போல தத்தளிக்கும் கடம்பன்குடி கிராமம் மற்றும் குழிமாத்தூர் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படுகிற வகையில் கோணக் கடுங்கால் ஆற்றில் சாலைப் போக்கு வரத்துக்கு உகந்த வகையில் பாலம் கட்ட வேண்டும்.
கடம்பன்குடி கிராமத்திலி ருந்து அம்பதுமேல்நகரம் வரையிலும் மற்றும் கடம்பன்குடி கிராமத்தி லிருந்து குழிமாத்தூர் கிராமம் வரையிலும் தார்சாலை அமைத்தும் பஸ் போக்குவரத்தினை உருவாக்கியும், கடம்பன்குடி கிராம மக்கள் வெளி உலகத்தோடு இணைந்து பயணிக்க ஆவன செய்து உதவ சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடம்ப ன்குடி மற்றும் குழிமாத்தூர் ஆகிய கிராமங்க ளின் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்