என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tree planted"
- டி.சி.டபிள்யூ நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார். உற்பத்தி பிரிவு உதவி தலைவர் எஸ். சுரேஷ் முன்னிலை வகித்தார். உலக வெப்பமயமாதலை தடுத்து ஓசோன் படலத்தை பாதுகாப்பதில் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ள கடமைகளைப் பற்றி கருத்தரங்கம் நடந்தது.
தொடர்ந்து நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டை தவிர்ப்பதற்கான உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் சுற்றுச் சூழல் துறை, சிவில் துறை மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.