என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » trichy district
நீங்கள் தேடியது "trichy district"
திருச்சி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி:
பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக அரசு அலுவலங்களுக்கு சென்று வருவதில் ஏற்படும் காலதாமதம், காலவிரயம், போக்குவரத்து செலவு விரயத்தை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களுக்கு அரசு அலுவலர்கள் சென்று கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம், திருச்சி மேற்கு வட்டத்தில் பஞ்சப்பூர், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் கிளிக்கூடு, மணப் பாறை வட்டத்தில் முகவனூர் தெற்கு, மருங்கா புரி வட்டத்தில் செவந்தாம் பட்டி, லால்குடி வட்டத்தில் கருடாமங்கலம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ராசாம் பாளை யம், முசிறி வட்டத்தில் நெய்வேலி, துறையூர் வட்டத்தில் பகன வாடி, தொட்டியம் வட்டத்தில் அரங்கூர் ஆகிய கிராமங்களில் நாளை 24-ந்தேதி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 150 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர், பாய்லர்ஆலை, துவாக்குடி, முசிறி உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான போலீசார் பணியாற்றி வருகிறார்கள். 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வந்த போலீசார் 80 பேரும், விருப்பத்தின்பேரில் இடமாற்றம் கேட்ட 12 பேரும், சிறு, சிறு தவறுகளுக்காக தண்டனை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 150 போலீசார் மாவட்டத்துக்குள்ளேயே வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திருச்சி:
இந்திய அளவில் இன்று முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 9 வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 300-வங்கி கிளைகள் உள்ளன. இவற்றி 1500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ஊதிய உயர்வு குறித்து அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும், 2 சதவீத ஊதியம் மட்டும் அளித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வை விரைவில் நிறைவேற்றக் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமராஜ் கூறியதாவது:-
நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 31.10.17-ல் 5 வருடம் நிறை வுற்றும் இதுவரை ஊதியம் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. கடந்த 5-ந் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 2 சதவீதம் மட்டும் ஊதியம் உயர்த்தப்படுவதாக இந்திய வங்கி சங்கம், இந்திய அரசும் அறிவித்தது. வேலைப்பழு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 300 வங்கிகள் உள்ளன. அவற்றில் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் திருச்சியில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X