என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Trichy robbery"
- பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உடன் வருகை தந்து சோதனை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது துவாக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அடுத்த நாள் அவர்கள் ஊர் திருப்பினர். பின்னர் வீட்டிற்கு சென்ற போது முன்பக்க கதவு பூட்டு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் குமார் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உடன் வருகை தந்து சோதனை நடத்தினர். இதில் இருவரின் கைரேகைகள் பதிவாகி உள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இன்று மதியம் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு மர்மகும்பல், திடீரென 2பேரையும் கீழே தள்ளி விட்டு அவர்கள் வைத்திருந்த சூட்கேசை பறித்து கொண்டு காரில் தப்பினர். சூட்கேசில் நிதி நிறுவன பணம் ரூ.1கோடி இருந்தது. ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து உடனடியாக நிதி நிறுவன ஊழியர்கள், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரை சுற்றி 9 செக்போஸ்ட்கள் உள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டன.
மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி எல்லையை தாண்டுவதற்குள் பிடித்து விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்டுள்ள மர்மநபர்கள், நிதிநிறுவன ஊழியர்கள் சூட்கேசில் பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyRobbery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்