search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy warriors"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL2018 # RTWvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து, அந்த அணியின் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், திருச்சி வாரியர்ஸ் அணி சிறப்பாக பந்து வீசினர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் பிரான்சிஸ் ரோகின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    விஷால் 25 ரன்னிலும், சித்தார்த் மற்றும் மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 # RTWvVKV 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திருச்சி வாரியர்ஸ்க்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TNPL2018 #TPvTW
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் எஸ் தினேஷ், கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவுசிக் காந்தி 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எஸ் தினேஷ் 18 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.



    நிதிஷ் ராஜகோபால் 26 பந்தில் 41 ரன்களும், எஸ் அபிஷேக் 27 பந்தில் 30 ரன்களும் அடிக்க ரூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது. திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் சோனு யாதவ், குமரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காரைக்குடி காளை. #TNPL2018 #RTWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.

    டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் சிக்கியது.

    அந்த அணியினரின் சஞ்சய் 28 ரன்களும், சுரேஷ்குமார், மணிபாரதி ஆகியோர் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    காரைக்குடி காளை சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டும், யோ மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. ஆதித்யாவும் அனிருதாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இந்த ஜோடி 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆதித்யா 17 ரன்களில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அனிருதா வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் யோ மகேஷ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

    திருச்சி வாரியர்ஸ் அணியின் சுரேஷ்குமார் 4 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #RTWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கோவை கிங்ஸ்க்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ். #TNPL2018 #TWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் கோவை கிங்ஸ் அணி மோதுகிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல்.(தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளிகள் (4 போட்டி) வென்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை (3), திருச்சி வாரியர்ஸ் (2), டூட்டி பேட்ரியாட்ஸ் (3), மதுரை பாந்தர்ஸ் (3) ஆகிய நான்கு அணிகள் தலா 4 புள்ளியுடனும், கோவை கிங்ஸ் (3) அணி 2 புள்ளிகளுடனும் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தலா 3 ஆட்டம்) ஆகிய அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 13-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் - அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி வாரியர்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 31 ரன் வித்தியாசத்திலும் வென்றது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திருச்சி அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் இந்திரஜித், சுரேஷ்குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் கணபதி-சந்திரசேகர் சிறப்பாக செயல்படுகிறார்.

    கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் காரைக்குடி காளையை சூப்பர் ஓவரில் வென்றது. அடுத்த 2 ஆட்டங்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 விக்கெட்), டூட்டி பேட்ரியாட்ஸ் (11 ரன்) அணிகளிடம் தோற்றது.

    ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் கோவை கிங்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammagethu
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    சென்னை:

    8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.

    பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இந்த சீசனில் இது தான் முதல் ஆட்டமாகும்.

    இவ்விரு அணிகளும் கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இரண்டு ஆட்டத்திலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வென்று இருந்தது.

    இன்றைய ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் நடப்பு சாம்பியன் அணி என்பது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கவில்லை. இது புதிய சீசன், புதிய போட்டி. அதுமட்டுமல்லாமல் முந்தைய சீசனுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்ட அணியாகும். இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். விஜய் சங்கர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று இருப்பதால் அவரால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது என்பதை ஏற்கனவே அறிவோம்’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் கூறுகையில், ‘இந்த ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சென்னையில் நாங்கள் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறோம். அதனை எங்களுக்கு சாதகமான அம்சமாக எடுத்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி அசத்துகிறது என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்’ என்றார்.



    திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த் குமார் கூறுகையில் ‘முதல் ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிப்போம்’ என்றார்.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ், எம்.அஸ்வின், ஹரிஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்சன்.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்திரஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய், கணபதி, எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    8 அணிகள் இடையிலான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நெல்லையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லீக் ஆட்டங்களும் (பிற்பகல் 3.15, இரவு 7.15 மணி), மற்ற நாட்களில் ஒரு லீக் ஆட்டமும் (இரவு 7.15 மணி) நடைபெறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு பெரும்பாலான வீரர்கள் அணி மாறி இருக்கிறார்கள். அதனால் எந்த அணி வலுவானது என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தாயகம் திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை டி.என்.பி.எல். தொடரில் நீடிப்பார்.

    காரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக தவற விடுவார்.

    டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி எடுப்பதுடன், பேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

    தொடக்க விழா முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    தொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×