என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Triumph"
- இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும்.
- டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டேடோனா 660 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 25000 பணம் செலுத்தி இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பைக்கின் விலை 9 லட்சத்தில் இருந்து 10 லட்சத்திற்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
டேடோனா 660 பைக் 660cc மூன்று சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது.
இந்த பைக்கின் பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 கியர்கள் உள்ளன.
- இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
- டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியானது.
பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இடையிலான கூட்டணி மூலம் டிரையம்ப் பிராண்டிங்கில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 400சிசி, சிங்கிள் சிலிண்டர் பிளாட்ஃபார்மில் டிரையம்ப் நிறுவனம் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில், 2024 இறுதிக்கிள் மற்றொரு புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பஜாஜ் ஆட்டோ தலைமை செயல் அதிகாரி ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இந்த மோட்டார்சைக்கிள் மிடில் வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான தகவலை தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் திரக்ஸ்டன் 400 மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் திரக்ஸ்டன் மாடலை போன்ற தோற்றம் கொண்ட செமி-ஃபேர்டு மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.
ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400X போன்றே இந்த பைக்கும் 400சிசி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த பைக் கஃபே ரேசர் பிரிவில் இடம்பெறும் என்றும் இதன் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.
- இரு மாடல்களிலும் ஆஃப் ரோடு ரைடிங் வசதி உள்ளது.
- இரு மாடல்களும் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
டிரையம்ப் இந்தியா நிறுவனம் 2024 டைகர் 900 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள் GT மற்றும் ரேலி ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டைகர் 900 GT மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 95 ஆயிரம் என்றும் ரேலி ப்ரோ மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிசைனை பொருத்தவரை 2024 டிரையம்ப் டைகர் 900 ரேலி ப்ரோ மற்றும் டைகர் 900 GT மாடல்களில் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் (பைக் ஓட்டும் போது கால் வைக்கும் இடம்) வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களும் ஆஃப் ரோடு ரைடிங், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், ரேலி ப்ரோ மாடலில் ஆஃப் ரோடிங் சற்று சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிகிறது.
புதிய டைகர் 900 ரேலி ப்ரோ மாடல்- கார்பன் பிளாக், ஆஷ் கிரே மற்றும் மேட் காக்கி என மூன்று நிறங்களிலும் GT மாடல்- கிராஃபைட், ஸ்னோடோனியா வைட் மற்றும் கார்னிவல் ரெட் என மூன்று நிறங்களிலும் கிடைக்கின்றன.
2024 டிரையம்ப் டைகர் 900 மாடலில் இன்லைன், மூன்று சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு, 888சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 106.5 ஹெச்.பி. பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது டிரைடன்ட் 660 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரத்யேக பெயின்ட் மற்றும் விசேஷ அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 1970-க்களில் அதிக வெற்றிகளை பெற்ற ஸ்லிப்பரி சாம் ரேஸ் பைக்கை நினைவு கூறும் வகையில், டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மாடல் டிஸ்டின்டிவ் வைட் மற்றும் மெட்டாலிக் புளூ, ஆங்காங்கே ரெட் ஸ்டிரீக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் 67 எண்ணின் கிராஃபிக் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த நிறத்திற்கு ஒற்றுப்போகும் நிறத்தில் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பெல்லிபேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இந்த மாடலை ஸ்டான்டர்டு எடிஷனில் இருந்து வித்தியாசமானதாக மாற்றுகிறது.
மெக்கானிக்கல் வகையில், டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த பைக்கின் டியுபுலர் ஃபிரேமுடன் ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 310mm டிஸ்க்குகள், பின்புறம் 255mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரைடன்ட் மாடலில் இரண்டு ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், நேவிகேஷன் வசதி, ஆல்-எல்.இ.டி. லைட்டிங் மற்றும் ஆட்டோ கேன்சலிங் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 12 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
- இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 X மாடல்களுக்கான முன்பதிவை இந்திய சந்தையில் துவங்கி விட்டது. லண்டனில் நடைபெற்ற சர்வதேச வெளியீட்டை ஒட்டி, இந்திய முன்பதிவை ஏற்கனவே துவங்கி இருந்தது. இந்த நிலையில், புதிய மாடல்களின் முன்பதிவு துவங்கிய பத்து நாட்களில் இந்த மாடல்களை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் தான் டிரையம்ப் ஸ்பீடு 400 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் தான் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விலை காரணமாக, இந்த மாடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைக்கு டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடலை மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் வெளியீடு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இரு மாடல்களிலும் 398.15சிசி, லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்பி பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
- 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் விலை ரூ. 10 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
- புதிய 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல்களுக்கான முன்பதிவு மார்ச் மாதம் துவங்கியது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில்வெயிட் நேக்கட், 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 R மற்றும் டாப் எண்ட் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
புதிய ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல் 2023 பிப்ரவரி மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டு, புதிய தலைமுறை மாடலாக மாற்றப்பட்டது. 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் விலை ரூ. 10 லட்சத்து 17 ஆயிரம் என்று துவங்குகிறது. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல் விலை ரூ. 11 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
மார்ச் மாதத்திலேயே புதிய 2023 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் 765 மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. புதிய ஸ்டிரீட் டிரிபில் R மாடல்- ரோடு, ரெயின், ஸ்போர்ட் மற்றும் ரைடர்-கான்ஃபிகரபில் என மொத்தம் நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்- முந்தைய மாடலில் உள்ள நான்கு ரைடிங் மோட்களுடன் டிராக் மோட் சேர்த்து ஐந்து ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
2023 மாடல்களில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் புதிதாகவும், கூர்மையாகவும் உள்ளன. இத்துடன் பின்புற இருக்கை புதிய நிறம் கொண்டிருக்கிறது. டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் R மாடல் சில்வர் ஐஸ்-ஸ்டாம் கிரே, எல்லோ கிராஃபிக்ஸ் மற்றும் க்ரிஸ்டல் வைட்-ஸ்டாம் கிரே, லித்தியம் ஃபிலேம் கிராஃபிக்ஸ் என இரன்டு நிறங்களில் கிடைக்கிறது.
டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் RS மாடல்- சில்வர் ஐஸ்-பஜா ஆரஞ்சு - ஸ்டாம் கிரே கிராஃபிக்ஸ், கார்னிவல் ரெட்-கார்பன் பிளாக் - அலுமினியம் சில்வர் கிராஃபிக்ஸ் மற்றும் காஸ்மிக் எல்லோ - கார்பன் பிளாக் - அலுமினியம் சில்வர் கிராஃபிக்ஸ் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மாடல்களில் உள்ள என்ஜின், இதுவரை வெளியான ஸ்டிரீட் டிரிபில் மாடல்களில் இல்லாத அதிக திறன் கொண்டுள்ளன. RS மாடலில் உள்ள என்ஜின் 128 ஹெச்பி பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. R மாடலில் உள்ள என்ஜின் 118 ஹெச்பி பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- ஹாலிவுட் திரைப்படம் நோ டைம் டு டை காட்சியில் வந்த டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளது.
- இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை ஏல முறையில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுக்க பிரபலமான திரைப்பட சீரிஸ் ஜேம்ஸ் பாண்ட் இருக்கிறது. இந்த சீரிசில் வெளியான "நோ டைம் டு டை" திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில், திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை ஏலத்தில் விற்பனை செய்ய பட தயாரிப்பு நிறுவனமான இயான் ப்ரோடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் சீரிசில் 25 ஆவது திரைப்படமான "நோ டைம் டு டை" அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்துள்ளது. இதில் பல்வேறு ஆடம்பர கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி லேண்ட் ரோவர் நிறுவனமும் வாகனங்களை வழங்குவதற்காக திரைப்பட நிறுவனத்துடன் இணைந்திருந்தது. அதன்படி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளின் ஏலம் ஆன்லைனில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி முழுக்க லண்டனை சேர்ந்த செவன் ஹாஸ்பைஸ் (Severn Hospice) எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. நோ டைம் டு டை திரைப்படத்தில் வரும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மோட்டார்சைக்கிளை அசாசின் பிரைமோ பயன்படுத்தி இருந்தார். இது திரைப்படத்தின் முதன்மை காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 மட்டுமின்றி ஆஸ்டன் மார்டின் DB5, ஆஸ்டன் மார்டின் V8 மற்றும் லேண்ட் ரோவர் டிபெண்டர் போன்ற மாடல்களும் ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் அதிகபட்சம் 30 ஆயிரம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்டின் DB5 மாடல் அதிகபட்சம் 2 மில்லியன் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 கோடி வரை விற்பனையாகும் என தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் V8 மாடல் 7 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 46 லட்சம் வரை விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் 5 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 கோடியே 60 லட்சம் வரை விற்பனையாகலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்