search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triumph Motorcycle"

    • ஸ்கிரம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 996, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 போன்றே ஸ்கிராம்ப்ளர் 400X மாடலும் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள், ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் உயரமான ஸ்டான்ஸ், ஹெட்லைட் கிரில், ஸ்ப்லிட் சீட், ஹேண்டில்பார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

     

    டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்.பி. பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. லைட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் வழங்கப்பட்டு உள்ளது.

    • டிரையம்ப் நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • ஸ்டிரீட் ட்வின் மாடல் தான் தற்போது ஸ்பீடு ட்வின் 900 என அழைக்கப்படுகிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஸ்டிரீட் ட்வின் சீரிஸ் மாடல், இனி ஸ்பீடு ட்வின் 900 என பெயர் மாற்றம் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம் என துவங்குகிறது. புதிய பெயர் மட்டும் இன்றி டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்த மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என அறிவித்து இருக்கிறது.

    அதன்படி இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடல் - டிரையம்ப் ஜெட் பிளாக், மேட் ஐயன்ஸ்டோன் மற்றும் மேட் சில்வர் ஐஸ் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய பெயிண்ட் பியூவல் டேன்க் மீது மேட் சில்வர் ஐஸ் பினிஷ் மற்றும் எல்லோ நிற கிராபிக்ஸ் கொண்டு இருக்கிறது. இத்துடன் ஜெட் பிளாக் நிற சைடு பேனல்கள், ஜெட் பிளாக் நிற மட் கார்டுகள் உள்ளன.


    விலை விவரங்கள்:

    ஜெட் பிளாக் ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம்

    மேட் ஐயன்ஸ்டோன் ரூ. 8 லட்சத்து 48 ஆயிரம்

    மேட் சில்வர் ரூ. 8 லட்சத்து 48 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    இதன் ஸ்டைலிங் எவ்வித மாற்றமும் பெறவில்லை. புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஒற்றை பீஸ் சாடில், ட்வின் சைடு எக்சாஸ்ட் கேரியர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.1 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த மாடலில் டியுபுலர் ஸ்டீல் ட்வின் கிரேடில் பிரேம், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், இரண்டு சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் முழுமையாய் அப்டேட் செய்யப்பட்ட 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ட்ரையம்ப் டைகர் 1200 XCX எனும் ஒற்றை மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியானதில் கடந்த 80 ஆண்டுகளில் ட்ரையம்ப் வெளியிட்ட டைகர் மோட்டார்சைக்கிள்களை விட புதிய டைகர் 1200 மாடல் அதிநவீன மோட்டார்சைக்கிள் மாடலாக ட்ரையம்ப் டைகர் 1200 இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வெளிவரும் புதிய டைகர் 1200 மாடலில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகர் 1200 எடை முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவாக இருக்கிறது. சேசிஸ் இன்ஜின் மற்றும் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை வைத்து எடை குறைக்கப்பட்டிருப்பதாக ட்ரையம்ப் தெரிவித்துள்ளது.



    2018 டைகர் 1200 மாடலில் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் அசிஸ்ட், ரைடு-பை வயர் திராட்டிள் மற்றும் கிட்டத்தட்ட ஆறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வின்ட்ஸ்கிரீனினை மின்சாரம் மூலம் மாற்றியமைக்கக் கூடியதாகவும், ஆப்ஷனல் ஹீட்டெட் க்ரிப்கள் மற்றும் சீட்களை வழங்குகிறது. 

    புதிய மாடலில் 1215 சிசி இன்-லைன் 3-மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பிஹெச்பி @9350 ஆர்பிஎம் பவர், 122 என்எம் டார்கியூ @7600 ஆர்பிஎம் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பேக்லிட் ஸ்விட்ச் கியர், எல்இடி லைட்டிங், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    முன்பக்கம் டைகர் 1200 மாடலில் 48 மில்லிமீட்டர் WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழஹ்கப்பட்டுள்ளது. இத்துடன் ட்வின் 305 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பிரெம்போ 4-பிஸ்டன் கேலிப்பர்கள், சிங்கிள் 282 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் நசின் ட்வின்-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தாயாவில் ட்ரையம்ப் 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் விலை ரூ.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×