search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truth"

    • அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன.
    • காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

    மும்பையின் உரோலியில் உள்ள கோலிவாடா பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்த கார் விபத்து பரபரப்பை ஏற்படுதத்தி வருகிறது. தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் மீன் வாங்க சென்ற காவேரி நாக்வா என்ற பெண் பின்னால் இருந்து வந்து இடித்து பி.எம்.டபில்யூ காரின் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

     

    விபத்து ஏற்படுத்திய காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மிஹிர் தலைமறைவான நிலையில் இளைஞனின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்து நடந்தபோது மிஹிர் ஷாவுடன் காருக்குள் இருந்த அவரின் குடும்ப ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவாத் கைது செய்யப்டயுள்ளார்.

    இந்நிலையில்அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூலமும் போலீஸ் கைப்பற்றிய சிசிடிவி மூலமும் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. தற்போது போலீஸ் கைப்பற்றியுள்ள சிசிடிவி வீடியோவில் மிஹிர் விபத்து ஏற்படுத்தியவுடன், காரை நிறுத்தாமல் ஒட்டவே, 1.5 கி.மீட்டருக்கு பானட்டில் சிக்கிய காவேரி இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் காரை நிறுத்திய மிஹிர் மற்றும் அவரது ஓட்டுநர் ராஜ்ரிஷி காரில் இருந்து இறங்கி, படுகாயமடைந்த காவேரியை பான்ட்டில் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளனர். பின்னர் மிஹிருடன் காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து  காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றது பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில், விபத்து குறித்து மிஹிர் தனது தந்தை ராஜேஷ் ஷாவுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். மகனை தப்பிக்க வைக்க திட்டமிட்ட ராஜேஷ் ஷா, மெர்ஸண்டிஸ் காரில் வந்து காலா நகர் என்ற இடத்தில் மிஹிரை மெர்ஸண்டிசில் ஏற்றி தப்பிக்க வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ காரை ஓட்டுநர் ராஜ்ரிஷி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசை நம்பவைக்க ராஜேஷ் ஷா திட்டமிட்டிருந்த்ததும் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடப்பதற்கு முன் மிஹிர் மதுபான பாரில் இருந்து வெளியில் வரும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் கைப்பற்றியுள்ளது.

    புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் விபத்தை ஏற்படுத்திய மிஹிர், தந்தை ராஜேஷ் ஷா, ஓட்டுநர் ராஜ்ரிஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி முழுமையான அறிதல் இல்லாததால் போலீஸ் விளக்கம் அளிக்க திணறியதால், அவர்களை நன்கு தயார் செய்துகொண்டு வந்து வழக்கு குறித்து பேசுமாறு நீதிபதி தெரிவித்தது குறிப்பிடதக்கது. மேலும் தற்போது  ராஜேஷ் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மிஹிர் ஷாவை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. 

    ×