என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » try to suicide
நீங்கள் தேடியது "try to suicide"
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #womenpolice
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் போலீஸ் விஷம் குடித்தார். அவர் அதிகாரிகள் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த கீழ் அணைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 25). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஆயுதப்படையில் இருந்து திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில், லதா கடந்த ஒருவாரமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று கோவில் பிரகாரத்தில் லதா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, லதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுய நினைவு இன்னும் திரும்பவில்லை.
ஏடிஎஸ்பி வனிதா மற்றும் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி செல்வி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பெண் போலீஸ் லதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு வந்த லதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பெண் போலீஸ் லதா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகளின் தொல்லை காரணமாக அவர் விஷம் குடித்தாரா? அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட மனவிரக்தியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #womenpolice

×

X