search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udumalai radhakrishnan"

    அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த கூளநாயக்கன் பட்டி கிராமத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 69 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது-

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை பல்வேறு நிலைகளில் முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மாணவர்களின் நலன் முக்கியம். மார்ச் மாதம் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதிகம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் முதலில் அவர்களது பணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு பணிக்கு திரும்பவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 9 லட்சத்து 12 ஆயிரத்து 736 குடும்பங்களுக்கு 37 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

    உடுமலை:

    திருப்பூர் உடுமலை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சரின் ஆணையின் படி இன்று முதல் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வட்டத்தில் 27,446 ஏக்கரும், மடத்துக்குளம் வட்டத்தில் 7,492 ஏக்கரும், தாராபுரம் வட்டத்தில் 8,395 ஏக்கரும், பல்லடம் வட்டத்தில் 7,887 ஏக்கரும், திருப்பூர் வட்டத்தில் 11,309 ஏக்கரும் மற்றும் காங்கயம் வட்டத்தில் 15,392 ஏக்கர் என 77,921 ஏக்கரும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் 12,567 ஏக்கரும், மற்றும் சூலூர் வட்டத்தில் 4,033 ஏக்கர் என 16,600 ஏக்கரும் ஆக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சார்ந்த 94,521 ஏக்கர் பாசனப் பரப்பு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும், இன்று முதல் ஒரு சுற்றுக்கு மொத்தம் 1900 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அதிகரித்து வழங்கப்படும்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை வேளாண் மக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தனியரசு எம்.எல்.ஏ., உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், திருமூர்த்தி அணை கோட்ட செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, உதவி பொறியாளர் சண்முகம், உடுமலை தாசில்தார் தங்கவேல் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ.645 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக கால்நடைத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.441 கோடியே 31 லட்சம், கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.41 கோடியே 73 லட்சம், தேசிய கால்நடை இயக்க திட்டங்களில் மத்திய அரசின் பங்காக ரூ.162 கோடியே 42 லட்சம் என மொத்தம் ரூ.645 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்’ என்றார். 
    ×