search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு 10000 இணையதள கருவிகளை எலான் மஸ்கின் ஸ்டார் லைட் நிறுவனம் அனுப்பியது.
    • தற்போது உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

    • ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
    • உக்ரைனின் கோரிக்கை குறித்து அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என தகவல்

    உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின் கோரிக்கை குறித்து, அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று கூறிய நிலையில், ஜெலன்ஸ்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

    உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கும் முடிவு உக்ரைனை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலுப்படுத்தும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியா போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அரசு குற்றம்சாட்டியது.
    • உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா. சபை தெரிவித்திருந்தது.

    கீவ்:

    ரஷியா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ரஷியா உடனான போரில் இதுவரை 287 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

    இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை. தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷியாவின் தாக்குதலை தடுக்க உக்ரைன் படைகள் அனைத்தையும் செய்துவருகிறது. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் வான்வழி தாக்குதலை தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    • டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
    • தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.

    கீவ்:

    உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் கூறியுள்ளனர்.

    ×