என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "union councilor"
- மார்ச் மாதம் 3-ந் தேதியன்று ஊரக உள்ளாட்சி துறையால் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சாலை ஒப்படைக்கப்பட்டது.
- இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து காமராஜர் தினசரி சந்தை வழியாக சென்று தென்காசி-நெல்லை சாலையில் இணையும் ஊராட்சி ஒன்றிய சாலையானது அதிக மக்கள் போக்குவரத்து கொண்ட சாலையாகும்.
இந்த சாலையை மாநிலநெடுஞ்சாலை துறைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதியன்று ஊரக உள்ளாட்சி துறையால் அரசாணை எண் 20- மூலம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் இதுசம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அரசாணை வெளியிடாததால் இந்த சாலை இப்போது ஊராட்சி ஒன்றிய சாலையாகவும் இல்லாமல், நெடுஞ்சாலைத்துறை சாலையாகவும் இல்லாமல் பணிசெய்யமுடியாமல் சாலை பராமரிப்பின்றி மேடு பள்ளங்களாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது.
அரசு இந்த சாலை பணியை தொடங்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்ற நிலை உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் இங்கு காணப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது . மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
எனவேஇது குறித்து ஆலோசித்த இந்த சாலையில் இயங்கிவரும் அரிசி ஆலை, செயற்கை மண் உற்பத்திசெய்யும் ஆலை ஆகியவற்றின் தொழில் அதிபர்கள் ஆர்.பி.ராஜன், ஜான், கே.பி.என்.ராஜ், தமிழ்பாண்டி, கே.பி.என்.அன்பு, ஏ.எஸ்.பி. பாஸ்கர், ஏ.கே. என்.ஜார்ஜ், ஏ.எஸ்.பி.சந்திரன் ஆகியோர் முடிவெடுத்து அரசு சாலை பணிதொடங்க தாமதம் ஆகும் என்பதால் மக்கள் நலன் கருதி தங்களது சொந்த செலவில் சாலையை சீரமைக்க முடிவெடுத்து ஒன்றிய குழு உறுப்பினர் ராம உதயசூரியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா ஆகியோர் மேற்பார்வையில் மேடு பள்ளங்களில் மண்ணை கொட்டி சாலையை திருத்தும் பணியினை மேற்கொண்டனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.