என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Urvashi Amirtaraj MLA"
- கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன.
- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார்.
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனத்தில் ஸ்ரீவை குண்டத்தில் இருந்து ஏரல் வரை நேரிடையாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொற்கைகுளம் பாசனம் மூலம் கொற்கை, கொடுங்கணி, உமரிக்காடு மற்றும் முக்காணி பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலும், ஆறுமுகமங்கலம் குளம் மூலம் கரையடியூர், கணபதிசமுத்திரம், லெட்சுமிபுரம், அகரம், கொட்டாரக்குறிச்சி, மார மங்கலம், இடையர்காடு மற்றும் அரசன்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு பேய்க்குளம் குளம் பாசன பகுதிகளில் சுமார் 3ஆயிரம் ஏக்கார் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் இந்த பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன. இதனால் இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல் மற்றும் வெற்றிலை பயிர்கள் அனைத்தும் கருகி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்க ளுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார். குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளதால் வாய்காலில் வரும் தண்ணீர் பேய்க்குளம் வரை தண்ணீர் சென்று சேரவில்லை.
இதையடுத்து அவர், அமைச்சர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தாமிரபரணி ஆறு செயற்பொறியாளார் ஆகியோரை சந்தித்து ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரோடு கூடுதாலாக 250 கன அடி தண்ணீர் சேர்த்து 350 கன அடி தண்ணீர் தொடர்ந்து 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.
- குளத்துக்குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
- அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தென்திருப்பேரை:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையனோடை பஞ்சாயத்து குளத்துக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி மக்களிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை போடும் பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, வட்டார செயலாளர் நிலமுடையான், முன்னாள் நகரத்தலைவர் வக்கீல் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சீனி ராஜேந்திரன், சிவகளை பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
- அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி:-
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியதாழை சவேரியார் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் மெர்லின் (வயது41). இவரது மனைவி அட்லிண்டா (35). இவர்கள் தனது மகன்க ளுடன் மோட்டார் சைக்கி ளில் திருச்செந்தூர் நோக்கி சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த அட்லிண்டா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அறிந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அட்லிண்டாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கினார்.
அப்போது, பெரியதாழை பங்குதந்தை சுசீலன், ஊர் பெரியவர்கள் அந்தோணி, லிபொன்ஸ் அமலதாஸ், கூட்டுறவு சங்க தலைவர் சந்தியா ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் காங்கிரஸ் எடிசன், ஊடகப்பிரிவு முத்துமணி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய சீலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட கமிட்டி ஜெனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்