search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthukottai accident"

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும்.

    இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சமையல் கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சாலாபுரம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகேந்திரன் (வயது33). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சுகேந்திரன் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.
    ஊத்துக்கோட்டை அருகே நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50) சமையல்காரர்.

    நேற்று இரவு உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த தரணி, சதீஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்ய சென்றார்.

    தச்சூர்மேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது.

    இதில் மணி, தரணி, சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது நரி குறுக்கே பாய்ந்ததால் வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே கரகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் ராஜேஷ் (வயது30). விவசாயி.

    இவர் சீத்தஞ்சேரியில் இருந்து கரகம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென நரி ஒன்று ஓடியது. அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அதன் மீது மோட்டர் சைக்கிளை மோதி கீழே விழுந்தார்.

    லேசான காயம் அடைந்த நரி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கீழே விழுந்ததில் ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவ்வழியே வந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #accidentcase

    ஊத்துக்கோட்டையில் லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை, மேற்கு காவாங்கரை பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி (வயது 80). இன்று அதிகாலை அவர் ஊத்துக்கோட்டை பஸ் டிப்போ அருகே உள்ள புற்று கோவிலை சுத்தப்படுத்த நடந்து சென்றார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த லாரி திடீரென பார்வதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்த வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்தனர். #Tamilnews

    ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள அழகிரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ராமராஜ் (வயது 27), பெயிண்டர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாபுவுடன் மோட்டார் சைக்கிளில் பெரியபாளையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே செஞ்சிகரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே, ஊத்துக்கோட்டை கலைஞர்நகர் கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த பிரசன்னா (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ராம்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யா, பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

    ×