என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vadamadurai police station"
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் கீர்த்தனா. (வயது 24). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவரது உறவினர் சங்கர். (24). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த விசயம் கீர்த்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.
அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு தங்களது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் 2 தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதற்கு கீர்த்தனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்து சென்றனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என கீர்த்தனாவை சங்கருடன் அனுப்பி வைத்தனர்.
வடமதுரை அருகே மந்தைகுரும்ப பட்டியை சேர்ந்தவர் சத்யாதேவி (வயது20). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்பட்டியை சேர்ந்த பிரபாகரன்(வயது24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரபாகரன் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார்.
நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்த காதல்ஜோடி வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்.
அதன்படி எரியோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அவர்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க கருப்பையா (வயது 22). டிப்ளமோ முடித்துள்ள இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வடமதுரை அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (20). பெற்றோரை இழந்த இவர் தனது தாத்தா பராமரிப்பில் இருந்து வந்தார். பி.எட். படித்து வந்த பரமேஸ்வரி கல்லூரிக்கு செல்லும் போது தங்க கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூர் கொத்தமல்லி பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது25). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் ஜி.குரும்பபட்டி பள்ளத்துகளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் பிரியா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய ஜாதகம் பார்த்தனர்.
சில காலம் பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம் என இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் மாரிமுத்து மற்றும் பிரியா இருவரும் அடிக்கடி சந்தித்ததால் காதல் ஏற்பட்டது.
எனவே இருவரும் திருமணம் செய்யமுடிவு செய்தனர். ஆனால் பெற்றோர்கள் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறினர்.
அய்யலூர் ஆத்து பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா இருவரது பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
வடமதுரை:
வடமதுரை அருகே குட்டம் தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி (19). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு மில் வேலைக்கு சென்று வருகிறார். முத்துப்பாண்டி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார். அப்போது காயத்திரியுடன் பழக்கம் ஏற்பட்டது. உடனே இது காதலாக மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டாரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வாடிப்பட்டி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா இருவீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினார். காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே வாழலாம் என்று போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த கண்ணன் மகன் சரத்குமார் (வயது 23). சந்தைப் பேட்டையில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினசரி அய்யலூரில் இருந்து வையம்பட்டி சந்தைக்கு வேனில் செல்வது வழக்கம்.
அப்போது வைரம் பட்டியைச் சேர்ந்த யாஸ்மின் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெண் வீட்டார் அச்சுறுத்தல் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்