search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ValentineDay"

    மத்திய பிரதேசத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார். #Transgendermarriage
    இந்தூர்:

    உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்கியும், புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். விருப்பமான இடங்களுக்கு சேர்ந்து செல்வது, ரோஜாக்கள் பரிமாறிக்கொள்வது, சாக்லேட்டுகள் வழங்குவது போன்ற பல்வேறு விதங்களில் மகிழ்ச்சியுடன் காதலர் தினத்தை கொண்டாடினர்.

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங் பர்மர் எனும் திருநங்கையை 2 வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில் காதலர் தினமான நேற்று தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, திருநங்கையான ஜெயா சிங் பர்மரை, இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மேலும் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.



    தனது குடும்பம் இந்த திருமணத்தை ஏற்க வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கவில்லை என்றாலும் ஜெயா உடன்தான் நான் வாழப் போவதாகவும் மணமகன் ஜூனைத் கான் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஜுனைத்தின் பெற்றோர், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றாவது ஒருநாள் அவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக மணமகள் ஜெயா சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #Transgendermarriage
    குஜராத்தில் இளைஞர்கள் சிலர் காதலர் தினத்தையொட்டி, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். #valentineday
    அகமதாபாத்:

    உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்கியும், புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். விருப்பமான இடங்களுக்கு சேர்ந்து செல்வது, ரோஜாக்கள் பரிமாறிக்கொள்வது, சாக்லேட்டுகள் வழங்குவது போன்ற பல்வேறு விதங்களில் கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் காதலர் தினத்தை, அகமதாபாத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடி உள்ளனர். கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், அங்கிருந்த முதியவர்களுடன் இணைந்து ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



    இது குறித்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்சாரி எனும் இளைஞர் கூறுகையில், 'நம்மில் பலர், பெற்றோர்களே நமது முதல் காதல் என்பதை மறந்து விடுகிறோம். இக்காரணத்திற்காகவே இங்கு வந்து இத்தினத்தை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம். எங்கள் உடைகள் அயல்நாட்டினரைப் போல் இருக்கலாம், ஆனால் எண்ணங்களில் இன்றளவிலும் இந்தியராகவே இருக்கிறோம்’ என்றார். #valentineday 
    ×