என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vandalism"
- வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
- ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன.
கடலூர்:
கடலூர் அடுத்த ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை, சாத்தான்குப்பம், கீரப் பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளை யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக் கான ரூபாய்கள் பயிரிடப் பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப் பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதி களில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜன வரி மாதம் வரை வாழைத் தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறு வடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லா மல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.
இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1100 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தநிலையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூவன்பழம் ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விலை அனைத்தும் 2 மடங்காக உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் வாழைப் பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலை யில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- மணிகண்டன் (வயது 49)மனைவி நந்தினி (25) லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.
- இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
கடலூர்:
மந்தாரக்குப்பம் செக்கடி தெரு குமார் மகன் மணிகண்டன் (வயது 49)கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25) என்எல்சி இடத்தில் மதியழகன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். நேற்று வடலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் பணம் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் திடிரென்று அவர்களின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட நந்தினியின் தங்கை திவ்யா போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக புறப்பட்டு வந்தனர். இருவரும் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமா கின.இதில், வீட்டில் இருந்த ஜவ் அடுப்பு, துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.
இது குறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலை வீட்டருகே விற்பனைக்காக வைத்திருந்த தென்னங்கீற்று கட்டுகளில் திடீரென தீப்பற்றியது
- அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் நின்றகார்களிலும் நெருப்பு பரவும் வாய்ப்பு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம்,பிப்.11-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியை ேசர்ந்தவர் குமரன். இவர் அந்த பகுதியில் தென்னங்கீற்று வியாபாரம் செய்து வருகிறார்.இன்று அதிகாலை வீட்டருகே விற்பனைக்காக வைத்திருந்த தென்னங்கீற்று கட்டுகளில் திடீரென தீப்பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிய ெதாடங்கியது. இந்த தீ அருகில் நிறுத்தி இருந்த குமரனுக்கு சொந்தமான காரிலும் பற்றியது. இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது.சிறிது நேரத்தில் அந்த இடமுழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் நின்றகார்களிலும் நெருப்பு பரவும் வாய்ப்பு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து உடனே திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுஇந்த பகுதி போக்குவரத்துக்கு முக்கியமான சென்னை பிரதான சாலை ஆகும். தொடர்ந்து நெருப்பு பற்றி எரிந்ததால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அந்த வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் ஒருவழிபாதையில் திருப்பி விடப்பட்டதுஇதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்