search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vao arrested"

    • விவசாயி தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.
    • பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது60). விவசாயி. இவர் தனது பெற்றோரின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய கோட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

    இந்த மனுவிற்கு தீர்வு காணும் வகையில் மன்னவனூர் கிராம நிர்வாக அலுவலரான முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

    இதனையடுத்து ராஜகோபால் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக சாமிநாதன் கேட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசாருக்கு ராஜகோபால் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு த்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாத னிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டியில் பட்டாவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் கூலித் தொழிலாளி. இவர் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு பட்டா கோரி விண்ணப்பித்திருந்தார்.

    சுமார் 800 சதுரடி அளவுள்ள வீட்டுக்கு பட்டா வழங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர் வி.ஏ.ஓ. சுரேஷ்குமாரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் தடையில்லா சான்றிதழ் வழங்க சுரேஷ்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

    ரெங்கராஜன் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரெங்கராஜன் வி.ஏ.ஓ. சுரேஷ் குமாரிடம் கொடுத்தார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ. சுரேஷ்குமார், உதவியாளர் சின்ன பிச்சை ஆகியோரை கைது செய்தனர்.

    ×