search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varatupallam dam"

    • வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும்.
    • ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யான பர்கூர் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை.

    இந்த அணையில் மழைக் காலங்களில் மலைப்பகு திகளில் பெய்யும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த அணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதனை மீன்வளத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்க படுகின்றது. அந்த வகையில் வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும். அதில் ஒரு சில மீன்கள் இறந்து விடுகின்றது. மீதம் உள்ள மீன்கள் இனப்பெ ருக்கம் அடைகின்றது.

    ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனால் அவ்வப்போது மீன்கள் இறந்து அணையின் ஓரப்பகுதியில் செத்து மிதக்கிறது எனவும், இந்த அணையில் இருந்து எண்ண மங்கலம், வட்டக்காடு, கிருஷ்ணாபுரம், குருநாத புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் செல்வதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே பொதுப்பணி துறையும், மீன்வளத்துறையும் இதனை நேரில் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் அணைக்கு எவ்வளவு மீன் குஞ்சுகள் விட வேண்டுமோ அவற்றை உரிய முறையில் விட்டு மீன்கள் இறப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வரட்டுபள்ளம் அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.
    • இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுபள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. 33 கன அடி கொள்ளளவு கொண்ட அணை நடப்பாண்டு 4 முறை நிரம்பி வழிந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வரட்டுப்பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் நேற்று இரவு அணை தனது முழு கொள்ளளவான 33 கன அடியை எட்டியது.

    தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு மதகுகள் வழியாக வெளியேறும் நீர் அந்தியூர் மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நடப்பாண்டு 5-வது முறையாக அணை நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.
    • இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பசுமை நிறைந்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியை சுற்றி பார்க்கவும் உள்ளே செல்லவும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்தியூர், ஜூலை.5-

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணைப்பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்ததால் அணை நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.

    அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை பார்ப்பதற்கு அழகாக தோற்றம் அளிக்கிறது.

    மேலும் மாலை நேரங்களில் அணையை பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் பசுமை நிறைந்த இடமாக திகழ்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பசுமை நிறைந்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியை சுற்றி பார்க்கவும் உள்ளே செல்லவும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுப்பணி துறையின் மூலம் முன்பகுதியில் (நுலை வாயில்) கேட்கல் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த அணை பகுதிக்கு மக்கள் செல்ல பொதுப்பணி த்துறையினர், வனத்துறையினர் அனுமதி வழங்க அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பொழுது போக்கு இடமாக திகழ வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×