search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "various routes"

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக்கு கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 678 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போக்குவரத்து கழகங்களுக்கு 555 புதிய பஸ்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 140 புதிய பஸ்கள் வந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்-திருப்பூர், குன்னூர்- சேலம், கோத்தகிரி-பெரம்பலூர், கோத்தகிரி-மதுரை, கோத்தகிரி-திருச்சி, கோத்தகிரி-ஈரோடு, கூடலூர்-சேலம், கூடலூர்-திருப்பூர், கூடலூர்- ஈரோடு, கூடலூர்-கோவை, அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிளை-2-ல் இருந்து ராஜபாளையம், ஈரோடு, ஊட்டி-துறையூர், ஊட்டி-கள்ளிகோட்டை, ஊட்டி-ஈரோடு, ஊட்டி-சேலம் ஆகிய வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து 20 புதிய பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அதில் ஒரு புதிய பஸ்சை பார்வையிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் கடந்த ஆண்டு 19 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது நடப்பாண்டில் ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்பில் 20 புதிய பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

    அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டல பொது மேலாளர் மோகன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதிய பஸ்களுக்கு மாலை போடப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    ×