என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vazhapadi"
- மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
- உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், படையாச்சியூர், புழுதிக்குட்டை, பெரியகுட்டிமடுவு, கொட்டவாடி, கல்லாயணகிரி, சிங்கிபுரம், சோமம்பட்டி, இடையப்பட்டி, கல்லேரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வனப்பகுதிகள் ஆறு, ஏரி, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகள், மலை குன்றுகள், தரிசு நிலங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் விவசாயிகளின் விளைநிலங்களிலும், கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் விளை நிலங்களில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் கூட மயில்கள் சர்வ சாதரணமாக கூட்டம் கூட்டமாய் திரிகின்றன.
விளைநிலங்களில் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய விளை பொருட்கள் பயிரிடப்படுகிறது. இவற்றை மயில்கள் சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, படையாச்சியூர், கொட்டவாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக 100-க்கும் மேற்பட்ட மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழப்பாடி மற்றும் தும்பல் வனச்சரக வனத்து றையினர் மயில்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, கிராமப்புற விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கும் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கொட்டவாடி கிராமத்தை விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளை வயல்வெளியில் கூட்டமாக உள்ள மயில்கள் சிறிதும் பயமின்றி துரத்துகின்றன. இதனால் மயில்களைக் கண்டால் குழந்தைகள் அருகில் செல்வதற்கு தயங்குகின்றனர். இதற்கு தீர்வு காண சேலம் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 45). லாரி டிரைவர். சொந்தமாக லாரி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த லாரியில் வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வீராணம் ஏரிக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின் வயர் வைக்கோலில் பட்டு தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் அண்ணாதுரைக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணா மூச்சி, கோவிந்தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, ஐயம்புதூர், ஆலமரத்துப் பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவுரியார் பாளையம், மூலக்காடு, மாசிலா பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மேட்டூர் அணை மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம், தும்பல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
ஆகவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாமாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன் பட்டி, வெள்ளாளப் பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டானூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப்பட்டு, குண்ணூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடியை சேர்ந்தவர் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் மனைவி லீலாதேவி(வயது 35). இவர், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் பணி முடிந்ததும், நேற்று மாலை ஆத்தூரில் இருந்து சேசஞ்சாவடிக்கு பேருந்தில் வந்த மருத்துவர் லீலாதேவி, சேசன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இணைப் புச்சாலை வழியாக, அவரது வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மருத்துவர் லீலா தேவியை வழிமறித்து, கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவர் லீலாவதி புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தங்கச்சங்கலியை பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்