search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vazhapadi Aggressive"

    வாழப்பாடியில் தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை புறம்போக்கு நிலத்தை மீட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கொட்ட வாடி பிரிவு சாலை அருகே கடலூர் பிரதான சாலையோரத்தில் 2.16 ஏக்கர் சாலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, வாழப்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

    அதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் செல்லப் பாண்டியனை தனிநபர் ஆணையராக நியமித்த உயர்நீதிமன்றம், சாலை புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது. ஆணையர் அறிக்கையில் பேரில், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க வாழப்பாடி வருவாயத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொண் டனர்.

    சேலம் மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சி வந்தானாகார்க் தலைமையில், வாழப்பாடி வட்டாட்சியர் பொன்னுசாமி மண்டல துணை வட்டாட்சியர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர்கள் மதேஸ்வரன், அகிலன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி, தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்றி சாலை புறம்போக்கு நிலத்தை மீட்டனர்.

    ×