என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vellore aavin officers
நீங்கள் தேடியது "Vellore Aavin officers"
வேலூர் ஆவின் நிறுவனத்தில் 1½ லட்சம் லிட்டர் பால் மோசடி நடந்த சம்பவத்தில் 4 அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். #AavinMilk
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் குல்பி ஐஸ், 12 ஆயிரம் மோர் பாட்டில், 3 ஆயிரம் லிட்டர் மோர் பாக்கெட், 3 ஆயிரம் லஸ்ஸி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AavinMilk

அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 72 ஆயிரம் லிட்டர் பால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பாக்கெட் பாலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் லிட்டர் பால் பவுடராக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2 லட்சம் முதல் 3 லட்சம் கிலோ வரையில் நெய் தயாரிக்கப்படுகிறது.
இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் குல்பி ஐஸ், 12 ஆயிரம் மோர் பாட்டில், 3 ஆயிரம் லிட்டர் மோர் பாக்கெட், 3 ஆயிரம் லஸ்ஸி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AavinMilk
×

X