search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellore hospital"

    வேலூர் ஆஸ்பத்திரியில் நுரையீரல் பாதிப்பால் மூளைச்சாவு அடைந்த மாணவி உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பதி ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சைலஜா, மகள்கள் லிக்கிதா (வயது 12), மகிதா (9) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    7-ம் வகுப்பு படித்து வந்த லிக்கிதாவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மோசமானது. இதனையடுத்து அவரை வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இன்று காலை 8 மணிக்கு லிக்கிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது பெற்றோர் முன் வந்தனர். லிக்கிதாவின் கண்கள், கிட்னி, இதயம் ஆகியவை வேலூர் சி.எம்.சி., சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கு தானமாக பெறப்பட்டது. #tamilnews

    ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி, பல்வலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    வேலூர்:

    முன்னாள் பிரமதர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    15 நாட்களுக்கு ஒருமுறை முருகன், மனைவி நளினியை சந்திக்கிறார். இந்த நிலையில், நளினி கடந்த சில நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஓரிரு நாட்களாக பல்வலி அதிகமானது.

    இதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை 9.20 மணிக்கு நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். கடவாய் சொத்தை பல் ஒன்று பிடுங்கப்பட்டது.

    1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு 10.30 மணி அளவில் மீண்டும் வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு நளினி அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    ×