search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vendor died"

    திருவெண்ணை நல்லூர் அருகே தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்ற வியாபாரியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவெண்ணை நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாளம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது46) இவர் கெடிலம் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் கீழ்தணியாளம் பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெல்லும்  பயிரிட்டுள்ளார்.  

    நேற்று இரவு  பாலாஜி  வழக்கம் போல் அரிசிக்கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் கொட்டகையை திறந்து பாலாஜி உள்ளே சென்றார். அப்போது பாலாஜியை பாம்பு கடித்தது. இதனால்  அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். 

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர்  அவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திரு வெண்ணை நல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருச்சியில் இன்று சாலை விபத்தில் போலீஸ்காரர் மற்றும் வியாபாரி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. திடீரென பழுதாகவே டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் வாகனம், லாரியின் பின்புறம் மோதியது. இதில் போலீஸ்காரர் உறையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி ( வயது 56) சம்பவ இடத்திலேயே இறந்தார். பெரம்பலூரை சேர்ந்த பாண்டியன் (52) படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் பற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இரும்பு வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது 45). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதில் ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஹேமா கணவரின் உறவினர் மணிகண்டன், கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இது குறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்ய சக்திவேல், புஷ்பா, கார்த்திக் ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். துவாக்குடி அருகே ராவுத்தன்மேடு பிரிவு சாலையில் சென்ற போது பட்டுகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×